கோவில்களில் கேமரா இல்லாத செல்போன்களுக்கு கட்டுப்பாடு இல்லை: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

01 Sep 2026 www.thinathulir.com

கோவில்களில் கேமரா இல்லாத செல்போன்களுக்கு கட்டுப்பாடு இல்லை: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கோவில்களில் கேமரா இல்லாத செல்போன்களுக்கு கட்டுப்பாடு இல்லை: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 52 முக்கிய கோவில்களில் செல்போன்களை கொண்டு செல்லும் நடைமுறை இன்று (செப்டம்பர் 1) முதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்த நிலையில், கேமரா வசதி கொண்ட செல்போன்களுக்கு மட்டுமே கோவில்களுக்குள் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். கேமரா இல்லாத செல்போன்களுக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.கோவில்களின் புனிதத்தன்மையையும் ஆன்மிகச் சூழலையும் பாதுகாக்கும் நோக்கில், கோவில்களுக்குள் செல்போன் பயன்படுத்துவதற்கு ஏற்கனவே தடை உள்ளது. இருப்பினும், சில கோவில்களில் பக்தர்கள் செல்போன்களில் புகைப்படம், வீடியோ மற்றும் செல்பி எடுப்பதாக புகார்கள் வந்துள்ளன.மேலும், ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை கோவில் வளாகங்களில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில், இன்று முதல் 52 கோவில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.பக்தர்களின் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக, கோவில்களில் கட்டண அடிப்படையிலான பாதுகாப்பு பெட்டக வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெரிய கோவில்களில் மொத்தம் 20 ஆயிரம் செல்போன்களை வைக்கும் அளவுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையில் வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், வல்லக்கோட்டை சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.இதுபோல, காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், திருவள்ளூர் வீரராகவர் கோவில் மற்றும் திருத்தணி முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் செல்போன் கொண்டு செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டின் முக்கிய கோவில்களான திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை, சமயபுரம், ஸ்ரீரங்கம், நெல்லையப்பர், சுசீந்திரம், மதுரை அழகர் கோவில், கோவை கோணியம்மன் கோவில், சேலம் கோட்டை மாரியம்மன் கோவில், ராமேசுவரம் உள்ளிட்ட 52 கோவில்களில் முதற்கட்டமாக இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.திருவிழா காலங்கள் மற்றும் முக்கிய நாட்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கோவில்களுக்கு வரக்கூடும் என்பதால், அனைவரது செல்போன்களையும் பாதுகாப்பு பெட்டகங்களில் வைக்க போதிய இடவசதி இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பக்தர்கள் தங்களது செல்போன்களை வீடுகளில் அல்லது வெளியூரிலிருந்து வரும் பட்சத்தில் தங்கும் விடுதிகள் அல்லது கார்களில் பாதுகாப்பாகவைத்துவிட்டுகோவிலுக்குவருவதுசிறந்ததுஎன்றுமஅறிவுறுத்தியுள்ளனர்மேலும், கோவில் வளாகங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிடும் சம்பவங்கள் தொடர்ந்தால், அதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.