கோவில் நிலம் அருகே பஞ்சாயத்து அலுவலகம் கட்ட எதிர்ப்பு: நெல்லை கலெக்டர் இல்லம் முன்பு கிராம மக்கள் போராட்டம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
23 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 23 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கோவில் நிலம் அருகே பஞ்சாயத்து அலுவலகம் கட்ட எதிர்ப்பு: நெல்லை கலெக்டர் இல்லம் முன்பு கிராம மக்கள் போராட்டம்

கோவில் நிலம் அருகே பஞ்சாயத்து அலுவலகம் கட்ட எதிர்ப்பு: நெல்லை கலெக்டர் இல்லம் முன்பு கிராம மக்கள் போராட்டம்

நெல்லை மாவட்டம் மேட்டுப்பிராஞ்சேரி கிராமத்தில், பட்டியல் சமுதாயத்தினருக்கு சொந்தமான கோவில் நிலத்தின் அருகே பஞ்சாயத்து அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், அந்தப் போராட்டங்களை பொருட்படுத்தாமல் பஞ்சாயத்து அலுவலகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறி, 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நெல்லை கலெக்டர் இல்லம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால், தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை அலுவலகத்திற்குள் வரமாட்டோம் என தெரிவித்த கிராம மக்கள், மீண்டும் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.