கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்..! - தூத்துக்குடி கலெக்டர் தகவல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Sep 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Sep 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்..! - தூத்துக்குடி கலெக்டர் தகவல்

கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியம்..! - தூத்துக்குடி கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2026-27-ம் ஆண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு, 250 கோழிகள் வளர்க்கும் வகையிலான சிறிய அளவிலான நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, பயனாளி கோழிக்கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி சொந்த நிலம் வைத்திருக்க வேண்டும். அந்த இடம் மனிதர்கள் வசிக்கும் குடியிருப்புகள் மற்றும் நீர்நிலைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். 2023-24, 2024-25 மற்றும் 2025-26 ஆகிய ஆண்டுகளில் இதே திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன் பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது. தேர்வு செய்யப்படும் பயனாளி குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கு பண்ணையை தொடர்ந்து பராமரிப்பதாக உறுதியளிக்க வேண்டும். திட்டச் செலவில் மீதமுள்ள 50 சதவீதத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கி, திட்டமிடப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கி மூலம் பெறுவதற்கான ஒப்புதலை பயனாளி பெற்றிருக்க வேண்டும். சொந்த நிதியில் திட்டத்தை செயல்படுத்த விரும்புவோர், அதற்கான நிதித் திறனை நிரூபிக்கும் ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அரசு நிர்ணயித்த தகுதிகளை பூர்த்தி செய்யும் நபர்கள், தங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள அரசு கால்நடை மருந்தகத்தை அணுகி கால்நடை உதவி மருத்துவரிடம் இருந்து விண்ணப்பத்தைப் பெற்று, தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.