கோலி எனக்கு மிகுந்த உத்வேகம் அளித்தவர் – பி.வி. சிந்து
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கோலி எனக்கு மிகுந்த உத்வேகம் அளித்தவர் – பி.வி. சிந்து

கோலி எனக்கு மிகுந்த உத்வேகம் அளித்தவர் – பி.வி. சிந்து

இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனையும், இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பி.வி. சிந்து, கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனக்கு வழங்கிய ஊக்கமும் ஆலோசனைகளும் குறித்து மனம் திறந்துள்ளார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி, தோல்வி, காயம் மற்றும் மன அழுத்தம் போன்ற சவால்களை எதிர்கொள்ளும்போது, பிற விளையாட்டுகளைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த வீரர்களின் வழிகாட்டுதல் பெரிதும் உதவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விராட் கோலி மிகவும் அன்பான குணம் கொண்டவர் என்றும், அவருடன் பலமுறை உரையாடியுள்ளதாகவும் சிந்து தெரிவித்துள்ளார். அந்த உரையாடல்களில் தனது கிரிக்கெட் பயணம் மற்றும் சவாலான தருணங்களில் மன உறுதியை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது என்பது குறித்த அனுபவங்களை கோலி பகிர்ந்துகொண்டதாகக் கூறியுள்ளார். குறிப்பாக, சில நேரங்களில் மனதளவில் மிகவும் சோர்வடைந்திருந்தபோது, மீண்டும் தன்னம்பிக்கையுடன் செயல்படவும், போட்டியில் தனது இயல்பான ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தவும் கோலி கூறிய ஆலோசனைகள் உதவியாக இருந்ததாக சிந்து தெரிவித்துள்ளார். கடந்த 2025ஆம் ஆண்டு காயம் காரணமாக சிந்துவின் பேட்மிண்டன் பயணம் கடுமையான சோதனைகளைச் சந்தித்தது. கால் விரலில் ஏற்பட்ட காயத்துக்காக தொடர்ந்து சிகிச்சை மற்றும் மறுவாழ்வுப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததால், அவரால் எதிர்பார்த்த அளவுக்குப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை. இதனால் போட்டி முடிவுகளும் அவருக்குச் சாதகமாக அமையவில்லை. இந்தச் சூழல் அவருக்கு மனச்சோர்வையும் ஏற்படுத்தியது. அந்தக் கடினமான காலகட்டத்தில் விராட் கோலியைத் தொடர்புகொண்டு தனது நிலைமையைப் பற்றி சிந்து பேசியுள்ளார். அவர் கூறியதன்படி, கோலி சில நிமிடங்களிலேயே பதிலளித்ததுடன், மறுநாளே இருவரும் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர். அந்தச் சந்திப்பின்போது இருவரும் பகிர்ந்துகொண்ட விஷயங்களைத் தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்ள விரும்புவதாகக் கூறிய சிந்து, கோலி அப்போது தெரிவித்த ஒவ்வொரு வார்த்தையும் தனக்கும் தனது கணவர் வெங்கட தத்தா சாயிக்கும் என்றும் மறக்க முடியாதவை என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.