கொண்டாட்டம் ஆரம்பம்; ஜனநாயகன் பட டிக்கெட் முன்பதிவு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
20 Jul 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 20 Jul 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கொண்டாட்டம் ஆரம்பம்; ஜனநாயகன் பட டிக்கெட் முன்பதிவு

கொண்டாட்டம் ஆரம்பம்; ஜனநாயகன் பட டிக்கெட் முன்பதிவு

தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. நடிகர் விஜய்யின் திரையுலகப் பயணத்தின் கடைசி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம், அவர் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் விஜய் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தமிழக முதல்வராக பதவியேற்ற நிலையில், தற்போது ஜூலை 23 அன்று திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பிற மாநிலங்களில் நடைபெற்ற சிறப்புக் காட்சிகளுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி முழுமையாக நிறைவடைந்துள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகாவின் பெங்களூருவில், காலை 6 மணி சிறப்புக் காட்சிக்கான டிக்கெட்டுகள் ரூ.1,800 வரை விற்பனையானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இதை அறிவிக்கும் வகையில் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் தனது எக்ஸ் தளப் பதிவில், *"கொண்டாட்டத்தை துவங்கலாம் நண்பா, நண்பீஸ்"* என்று குறிப்பிட்டுள்ளது. முதல்வர் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், ‘ஜனநாயகன்’ ரூ.1,000 கோடி வசூல் சாதனையை எட்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.