கையில் புத்தகத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகை கீர்த்தி ஷெட்டி
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

11 Sep 2026 www.thinathulir.com

கையில் புத்தகத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகை கீர்த்தி ஷெட்டி

கையில் புத்தகத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நடிகை கீர்த்தி ஷெட்டி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களும் அவ்வப்போது கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி, இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்தைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்களைப் பெற்றார். பின்னர் அவருக்கு தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. தரிசனம் முடிந்து கோவிலில் இருந்து வெளியே வந்த கீர்த்தி ஷெட்டியுடன் பக்தர்கள் ஆர்வத்துடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். அப்போது அவரது கையில் இருந்த புத்தகம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அந்த புத்தகம் குறித்து கீர்த்தி ஷெட்டியிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அவர் அதற்கு பதிலளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.