கேரளா: காட்டெருமை தாக்கி அரசு ஊழியர் உயிரிழப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
29 Aug 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 29 Aug 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கேரளா: காட்டெருமை தாக்கி அரசு ஊழியர் உயிரிழப்பு

கேரளா: காட்டெருமை தாக்கி அரசு ஊழியர் உயிரிழப்பு

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் விலங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் (40). அரசு ஊழியரான இவர், ஆழப்புலாவில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்த சுனில், இன்று வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டெருமை திடீரென அவரை தாக்கியது.இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சுனிலை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சுனில் உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.