கேரளத்தில் வினோத திருமணம்: இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டையர் சகோதரர்கள்!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
02 Aug 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 02 Aug 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கேரளத்தில் வினோத திருமணம்: இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டையர் சகோதரர்கள்!

கேரளத்தில் வினோத திருமணம்: இரட்டை சகோதரிகளை மணந்த இரட்டையர் சகோதரர்கள்!

கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமணம், அதன் வித்தியாசமான அமைப்பால் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இரட்டை சகோதரர்களான அகில் கே. தாமஸ் மற்றும் நிகில் கே. தாமஸ், இரட்டை சகோதரிகளான மேகி மேரி தாமஸ் மற்றும் மரியா மேரி தாமஸை ஒரே நிகழ்வில் திருமணம் செய்து கொண்டனர்.சங்கனாச்சேரி மெட்ரோபாலிட்டன் தேவாலயத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தின் சிறப்பம்சம் மணமக்கள் மட்டுமல்ல. திருமணச் சடங்கை நடத்த வந்த பாதிரியார்களும் இரட்டையர்களாக இருந்தனர். மேலும், ஆலய உதவியாளர்களாக பணியாற்றியவர்களும் இரட்டை சகோதரர்களே என்பதால், இந்த நிகழ்வு மேலும் தனித்துவம் பெற்றது.சிறு வயதிலிருந்தே தங்களது திருமணம் இரட்டையர்களால் சூழப்பட்டு நடைபெற வேண்டும் என்பது தங்களது கனவாக இருந்ததாக மணமகள்கள் தெரிவித்தனர். அதற்காகவே இரட்டை பாதிரியார்களைத் தேடி அழைத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.மணமகன் சகோதரர்கள் இருவரும் வணிகக் கப்பல் துறையில் பணியாற்றி வருகிறார்கள். மணமகள்கள் இருவரும் தகவல் தொழில்நுட்ப (IT) துறையில் பணிபுரிகின்றனர். குடும்பத்தினரின் நீண்டநாள் விருப்பம் நிறைவேறிய இந்த திருமணம், சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.