கேரளத்தில் மாணவர் போராட்டம் தீவிரம்; தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்த போலீஸ்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

23 Jul 2026 www.thinathulir.com

கேரளத்தில் மாணவர் போராட்டம் தீவிரம்; தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்த போலீஸ்

கேரளத்தில் மாணவர் போராட்டம் தீவிரம்; தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்த போலீஸ்

நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக, ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றவர்களை டெல்லி போலீசார் வழிமறித்து தடுத்தனர். அப்போது நிலைமை பதற்றமடைந்ததைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். மேலும், கண்ணீர் புகைக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. டெல்லியில் நடைபெற்ற இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், மாணவர் அமைப்புகளும் நாடு முழுவதும் கண்டனம் தெரிவித்துள்ளன. போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கேரளத்தில் ஆளுநர் மாளிகை நோக்கி எஸ்எப்ஐ அமைப்பினர் நடத்திய பேரணியையும் போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்தனர்.இதற்கிடையில், நீட் விவகாரத்தை எதிர்த்து பல மாநிலங்களில் நடைபெற்று வரும் போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.