கேரள நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கேரள நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கேரள நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. கோட்டயம், மலப்புரம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் வெள்ளத்தின் தாக்கத்தால் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினரான சின்னம்மாள் ஆகிய இருவர் உயிரிழந்தனர். இதனிடையே, சென்னையைச் சேர்ந்த சங்கீதா, கேரளாவின் வாகமன் பகுதிக்கு குழுவினருடன் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அங்கு ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி அவர் உயிரிழந்தார். அவருடன் சென்ற மற்றொரு இளம்பெண் படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மலப்புரம் மாவட்டத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 5 இளைஞர்களில் 4 பேரை காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்றது. அவர்களில் ஒருவரின் உடல் நேற்று மீட்கப்பட்டது. காணாமல் போன மற்ற 3 பேரின் உடல்களும் இன்று அதிகாலை மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்கள் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 வயதான யாசிம், கருவாரக்குண்டு பகுதியைச் சேர்ந்த 33 வயதான ரகிம், வண்டூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான சஜாப் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 41 வயதான ராபின் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்த 41 வயதான சாஹிதாவும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.