குழந்தைகள் தினம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
14 Nov 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Nov 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

குழந்தைகள் தினம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

குழந்தைகள் தினம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: குழந்தைகளுக்கு வளமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதற்கு, முதலில் அவர்களின் நிகழ்காலம் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த நோக்கத்தில்தான் திமுக ஆட்சிக் காலங்களில் தடுப்பூசித் திட்டங்கள், சத்துணவில் முட்டை வழங்குதல், மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, தற்போதைய திராவிட மாடல் ஆட்சியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், வளரிளம் பெண்களுக்கான கருப்பைவாய்ப் புற்றுநோய் தடுப்பூசித் திட்டம் என குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி, அறிவியல் மீதான ஆர்வம் மற்றும் தனித்திறன்களை வளர்க்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகள் தங்களிடம் உள்ள தனித்திறன்களை மேம்படுத்தி, விரும்பிய இலக்கை நோக்கிப் பயணிப்பதற்கு தேவையான ஆதரவை பொறுப்புடன் வழங்குவோம். திரைகளின் ஒளியை மட்டும் சார்ந்திருக்காமல், அறிவின் ஒளியில் அவர்களது உலகம் விரிவடையட்டும். அனைவருக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.