கும்மிடிப்பூண்டி அருகே இளைஞர் வெட்டிக்கொலை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
14 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கும்மிடிப்பூண்டி அருகே இளைஞர் வெட்டிக்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே இளைஞர் வெட்டிக்கொலை

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே சானாபுத்தூர் கிராமத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சானாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் (17), பிளஸ்-2 படிப்பை நிறைவு செய்திருந்தார். மேற்படிப்புக்காக கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை விவசாய நிலம் அருகே உள்ள சுடுகாட்டில் ஒரு கல்லறையின் மீது ரத்தக்காயங்களுடன் அவரது உடல் கிடந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கும்மிடிப்பூண்டி போலீசார், ரஞ்சனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இருதரப்பினருக்கும் இடையே இருந்து வந்த முன்விரோதம் மற்றும் கோஷ்டி மோதல் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.கொலை செய்தவர்கள் ரஞ்சனின் உடலை சுடுகாட்டில் உள்ள கல்லறையின் மீது போட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தப்பியோடிய மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்