குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு வெண்கலம்... ஜூடோவில் பதக்கம் வெல்லும் வாய்ப்பில் வீராங்கனை!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
30 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 30 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு வெண்கலம்... ஜூடோவில் பதக்கம் வெல்லும் வாய்ப்பில் வீராங்கனை!

குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு வெண்கலம்... ஜூடோவில் பதக்கம் வெல்லும் வாய்ப்பில் வீராங்கனை!

ஜப்பானின் அய்ச்சி மாகாணம் நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், மகளிர் 60 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை அரையிறுதியில் இந்தியாவின் பிரியா கங்காஸ், சீன வீராங்கனை யாங் செங்யுவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரியா கங்காஸ் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. இதனிடையே, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அஸ்மிதா டே, மகளிர் 48 கிலோ ஜூடோ பிரிவின் ‘ரிபேசேஜ்’ சுற்றில் ஹாங்காங்கின் வோங் கா லீயை வீழ்த்தினார். இதன் மூலம் பதக்கம் வெல்லும் வாய்ப்பை நெருங்கியுள்ள அஸ்மிதா டே, வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மங்கோலியாவின் கன்பாட்ரின் நரான்செட்செக்கை எதிர்கொள்கிறார். இந்தப் போட்டி இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெறுகிறது.