குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு தங்கம் - வரலாறு படைத்த பர்வீன் ஹூடா
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
02 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 02 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு தங்கம் - வரலாறு படைத்த பர்வீன் ஹூடா

குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு தங்கம் - வரலாறு படைத்த பர்வீன் ஹூடா

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டையில் இந்தியாவின் பர்வீன் ஹூடா தங்கப் பதக்கத்தை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இறுதிப்போட்டியில் சைனீஸ் தாய்பே வீராங்கனையும் முன்னாள் உலக சாம்பியனுமான சென் நியென்-சின்னை எதிர்கொண்ட பர்வீன் ஹூடா, 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்தார். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் குத்துச்சண்டை வரலாற்றில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகளின் பட்டியலில் பர்வீன் ஹூடாவும் இணைந்துள்ளார். இதுவரை இந்தப் போட்டியில் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். மேலும், நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்றுள்ள 13-வது தங்கப் பதக்கம் இதுவாகும். கடந்த ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஊக்கமருந்து தொடர்பான விவகாரத்தில் சிக்கியதைத் தொடர்ந்து, பர்வீன் ஹூடா தனது வெண்கலப் பதக்கத்தை இழக்க நேரிட்டது. அந்தப் பின்னடைவுக்குப் பிறகு மீண்டும் களத்துக்கு திரும்பிய அவர், தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.