குத்துச்சண்டை: உலக சாம்பியனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லவ்லினா
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
30 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 30 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

குத்துச்சண்டை: உலக சாம்பியனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லவ்லினா

குத்துச்சண்டை: உலக சாம்பியனை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லவ்லினா

ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து பதக்கங்களைச் சேர்த்து வருகின்றனர். அந்த வகையில், மகளிர் 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்கோஹெய்ன் களமிறங்கினார். இதில் தற்போதைய உலக சாம்பியனான கஜகஸ்தானின் நடாஷா போக்டானோவாவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் லவ்லினா 3-2 என்ற கணக்கில் நடாஷா போக்டானோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டு வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினாவுக்கு, இந்த முறை தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.