குடும்பத் தகராறு: 8 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
26 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

குடும்பத் தகராறு: 8 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை

குடும்பத் தகராறு: 8 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை – ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை

சென்னை ஓட்டேரியில் குடும்பத் தகராறு காரணமாக 8 மாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி ஓராண்டு நிறைவடையாத நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதால், இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) விசாரணை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சென்னை ஓட்டேரி புதிய வாழை மாநகரைச் சேர்ந்த சந்தோஷ் (29), கோகிலா என்ற அஸ்ராவை (26) காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்த கோகிலாவுக்கும் அவரது கணவர் சந்தோஷுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் கோகிலா தனது கணவர் சந்தோஷுக்கு வீடியோ கால் செய்து, உடனடியாக வீட்டுக்கு வராவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாகத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சந்தோஷ் அவசரமாக வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, வீட்டில் மின்விசிறியில் புடவையால் தூக்கிட்ட நிலையில் கோகிலா உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதற்கிடையே, கோகிலாவின் தாயார் அம்மு, தனது மகளை அவரது கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கோகிலா திருமணமாகி ஓராண்டுக்குள் உயிரிழந்துள்ளதால், இச்சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.