'குடி'மகன்களுக்கு குட் நியூஸ்: டாஸ்மாக் கடையில் விரைவில் 25 புது ரகம் அறிமுகம்!
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

13 Sep 2026 www.thinathulir.com

'குடி'மகன்களுக்கு குட் நியூஸ்: டாஸ்மாக் கடையில் விரைவில் 25 புது ரகம் அறிமுகம்!

'குடி'மகன்களுக்கு குட் நியூஸ்: டாஸ்மாக் கடையில் விரைவில் 25 புது ரகம் அறிமுகம்!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் விரைவில் 25 புதிய பிராண்டு மதுபானங்கள் விற்பனைக்கு வர உள்ளன. இதற்கான விலை நிர்ணயம் தொடர்பாக மதுபான உற்பத்தி நிறுவனங்களுடன் அதிகாரிகள் நடத்தி வரும் பேச்சுவார்த்தை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் நிறுவனம், 11 மதுபான உற்பத்தி ஆலைகளிடமிருந்து பல்வேறு மது வகைகளையும், 7 ஆலைகளிடமிருந்து பீர் வகைகளையும், ஒரு ஆலையிடமிருந்து ஒயினையும் கொள்முதல் செய்து வருகிறது. தமிழகத்தில் தயாரிக்கப்படும் 174 மது வகைகள், 40 பீர் வகைகள், 4 ஒயின் வகைகள் ஆகியவை தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, பிற மாநிலங்களில் இருந்து 6 மது வகைகள், 5 பீர் வகைகள், 5 ஒயின் வகைகளும் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. மேலும், 538 வகையான மதுபானங்கள் டாஸ்மாக் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டு, வணிக வளாகங்களில் செயல்படும் மதுபானக் கடைகளில் விற்கப்படுகின்றன. கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில், அக்கட்சிக்கு நெருக்கமானவர்கள் நடத்தும் குறிப்பிட்ட சில மதுபான ஆலைகளிடம் இருந்து அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, மதுபான நுகர்வோர் விரும்பும் சில பிராண்டுகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு டாஸ்மாக் கடைகளில் புதிய பிராண்டு மதுபானங்களை அதிகளவில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மதுபான உற்பத்தி நிறுவனங்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்போது 25 புதிய மதுபான பிராண்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கான விலையை நிர்ணயிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிய பிராண்டு மதுபானங்கள் மற்றும் பீர் விற்பனை தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் 25 புதிய பிராண்டுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. விலை நிர்ணயம் முடிந்ததும், டாஸ்மாக் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு, விரைவில் மதுபானக் கடைகளில் அவற்றை விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.