குடிபோதையில் ஏரிக்குள் ஜீப்பை நிறுத்தியவர்கள்; தண்ணீரில் தத்தளிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

குடிபோதையில் ஏரிக்குள் ஜீப்பை நிறுத்தியவர்கள்; தண்ணீரில் தத்தளிப்பு

குடிபோதையில் ஏரிக்குள் ஜீப்பை நிறுத்தியவர்கள்; தண்ணீரில் தத்தளிப்பு

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள குமாரசெட்டி ஏரிக்கு, நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் ஜீப்பில் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஏரியில் குறைந்த அளவே தண்ணீர் இருந்ததால், ஜீப்பை ஏரிக்குள் நிறுத்திவிட்டு இருவரும் மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர் மதுபோதையில் இருந்த அவர்கள் ஜீப்பிலேயே தூங்கியுள்ளனர். இதற்கிடையில், நள்ளிரவில் எதிர்பாராத வகையில் கனமழை பெய்ததால் ஏரிக்கு திடீரென அதிகளவில் தண்ணீர் வந்துள்ளது. இதனால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து, ஜீப் தண்ணீரில் மூழ்கியது. தூக்கம் கலைந்து எழுந்த 2 வாலிபர்களும் ஜீப் தண்ணீரில் சிக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அப்பகுதி பொதுமக்களிடம் உதவி கேட்டுள்ளனர். பின்னர் பொதுமக்கள் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து, கயிறு மூலம் ஜீப்பை கட்டி நீண்ட நேரம் போராடி ஏரியில் இருந்து வெளியே மீட்டனர். தண்ணீரில் மூழ்கிய ஜீப்பை பொக்லைன் உதவியுடன் பொதுமக்கள் மீட்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.