காவேரிப்பட்டணம் பகுதியில் கத்தரிக்காய் கிலோ ரூ.50-க்கு விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
27 Sep 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 27 Sep 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

காவேரிப்பட்டணம் பகுதியில் கத்தரிக்காய் கிலோ ரூ.50-க்கு விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி

காவேரிப்பட்டணம் பகுதியில் கத்தரிக்காய் கிலோ ரூ.50-க்கு விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கத்தரிக்காய் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், சந்தையில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.50 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காவேரிப்பட்டணம் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயமே முக்கியத் தொழிலாக உள்ளது. இங்கு தக்காளி, கத்தரிக்காய், மிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கடந்த சில வாரங்களாக பெய்த சாதகமான மழை மற்றும் நிலவிய தட்பவெப்பநிலை காரணமாக, இந்த ஆண்டு கத்தரிக்காய் விளைச்சல் சிறப்பாக அமைந்துள்ளது. இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் கத்தரிக்காய்களை வேலூர், ஆற்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் நேரடியாக வந்து மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக கத்தரிக்காய் கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரை மட்டுமே விற்பனையாகி வந்தது. இதனால் சாகுபடிக்கான செலவுடன் ஒப்பிடும்போது விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை. இந்நிலையில், புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் காய்கறிகளை அதிகளவில் வாங்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக காய்கறிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. நேற்று காவேரிப்பட்டணம் தினசரி காய்கறி சந்தைக்கு கத்தரிக்காய் வரத்து அதிகமாக இருந்தபோதிலும், தரமான கத்தரிக்காய் கிலோ ரூ.50 வரை விற்பனையானது. பொதுவாக விளைச்சல் அதிகரிக்கும்போது காய்கறிகளின் விலை குறைவது வழக்கம். ஆனால், தற்போது கத்தரிக்காய்க்கு நல்ல விலை கிடைப்பதுடன், விளைச்சலும் அதிகரித்துள்ளதால் போதிய லாபம் கிடைப்பதாக அப்பகுதி காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.