சென்னை:தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்ககம் இன்று (09.09.2026) வெளியிட்டுள்ளது. இதன்படி, வகுப்பு வாரியாக காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 1 மற்றும் 2ஆம் வகுப்பு: இவ்வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 24ஆம் தேதி வரை நடைபெறும். 3 முதல் 10ஆம் வகுப்பு: 3 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 16ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி, செப்டம்பர் 24ஆம் தேதி நிறைவடைகின்றன. 11 மற்றும் 12ஆம் வகுப்பு: 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 25ஆம் தேதி வரை நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.