கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

12 Sep 2026 www.thinathulir.com

கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்

கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் விஜய்

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் பிரிட்டன் சென்றுள்ள தமிழக முதல்-அமைச்சர் விஜய், லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெற்ற லீ மேன்ஸ் கப் கார் பந்தயத்தை பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நடிகர் அஜித் குமார் பங்கேற்ற இந்த போட்டி, இந்திய நேரப்படி இரவு 9.45 மணிக்கு தொடங்கி, 11.45 மணிக்கு நிறைவடைகிறது. பந்தயத்திற்கு முன்னதாக முதல்-அமைச்சர் விஜயும், அஜித் குமாரும் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அப்போது அஜித்தின் பந்தயக் காரின் மீது அமர்ந்தும் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து அஜித்துக்கு கைகொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், இருவரது ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து அஜித் குமார் கூறுகையில், தனது பரபரப்பான பணிகளுக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி முதல்-அமைச்சர் விஜய் லண்டன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். இருவரும் ஒரே துறையில் 34 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், விஜய் முதல்-அமைச்சரானதில் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார். மேலும், விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக விஜய் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், தமது அழைப்பை ஏற்று அவர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் அஜித் குமார் தெரிவித்தார்.