காமன்வெல்த் விளையாட்டு: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

24 Jul 2026 www.thinathulir.com

காமன்வெல்த் விளையாட்டு: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

காமன்வெல்த் விளையாட்டு: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது. ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விளையாட்டு விழாவில், காமன்வெல்த் கூட்டமைப்பைச் சேர்ந்த 74 நாடுகளில் இருந்து சுமார் 3,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.இந்தியாவின் சார்பில் மொத்தம் 126 பேர் கொண்ட அணி களமிறங்கியுள்ளது. இதில் 78 வீரர்களும், 48 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் 8 முக்கிய விளையாட்டுகளிலும், 5 பாரா விளையாட்டு பிரிவுகளிலும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.இந்த நிலையில், போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கும் இந்த தருணத்தில் இந்திய அணிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்திய வீரர், வீராங்கனைகள் முழு உற்சாகத்துடனும், உறுதியுடனும், சிறப்பாக செயல்படும் மனப்பாங்குடனும் போட்டியில் பங்கேற்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறியுள்ளார். மேலும், இந்திய விளையாட்டு வீரர்களின் திறமையும் அர்ப்பணிப்பு உணர்வும் எப்போதும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு ஊக்கமளித்து வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.