காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயம்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
04 Nov 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 04 Nov 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயம்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம்

காசிமேடு மீனவர்கள் 9 பேர் மாயம்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம்

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களைத் தேடும் பணியில் இந்திய கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மற்றும் கப்பல் மூலம் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து செல்வழகன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு, கடந்த மாதம் 29-ந்தேதி 9 மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்றது. ஆந்திர மாநிலம் நிஜாம்பட்டணம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, புயல் எச்சரிக்கை காரணமாக மீன்வளத்துறை சார்பில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, படகு உரிமையாளர் செல்வழகன் தனது படகை இயக்கிய சூர்யாவை செல்போனில் தொடர்புகொண்டு, அருகிலுள்ள மீன்பிடித் துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்துமாறு அறிவுறுத்தினார். அதன்படி, விசைப்படகு நிஜாம்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த 2-ந்தேதி இரவு சூர்யா மீண்டும் விசைப்படகை எடுத்துக்கொண்டு ஆந்திர மாநிலம் ராமாயப்பட்டணம் துறைமுகத்தை நோக்கிப் புறப்பட்டுள்ளார். நடுக்கடலில் சென்றபோது படகின் என்ஜின் திடீரென பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலும், படகு இருந்த இடம் பற்றிய விவரமும் நேற்று அதிகாலை 3 மணியளவில் வாக்கி டாக்கி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகிற்கு இந்தத் தகவல் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதன்பிறகு மாயமான விசைப்படகில் இருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. படகு தற்போது எங்கு இருக்கிறது என்பதும் தெரியாததால், அதில் பயணித்த 9 மீனவர்களின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, படகு உரிமையாளர் செல்வழகன் காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், காணாமல் போன விசைப்படகையும் அதில் இருந்த 9 மீனவர்களையும் கண்டுபிடிக்கக் கோரி காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குநர் ஜான் பெக்கர் இந்திய கடலோர காவல் படைக்கு கடிதம் அனுப்பினார். இதனைத் தொடர்ந்து, இந்திய கடலோர காவல் படையினர் ஹெலிகாப்டர் மற்றும் தங்களது கப்பல் மூலம் நடுக்கடலில் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் மாயமான சம்பவத்தால், அவர்களது குடும்பத்தினர் மிகுந்த கவலையில் உள்ளனர்.