காங்கோவில் தீவிரமடையும் எபோலா: 2,500-ஐ கடந்த பலி எண்ணிக்கை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

காங்கோவில் தீவிரமடையும் எபோலா: 2,500-ஐ கடந்த பலி எண்ணிக்கை

காங்கோவில் தீவிரமடையும் எபோலா: 2,500-ஐ கடந்த பலி எண்ணிக்கை

மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோவில் எபோலா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. உலகின் மிகவும் ஆபத்தான வைரஸ் நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் எபோலா பாதிப்பால் அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,642 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை காங்கோவில் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,515 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு சுகாதாரத்துறை சவாலை எதிர்கொண்டு வருகிறது.இதனிடையே, எபோலா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக உலக சுகாதார அமைப்பு காங்கோவுக்கு 16 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.