காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி துப்பாக்கிச்சூட்டில் சிக்கினார்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
09 Aug 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 09 Aug 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி துப்பாக்கிச்சூட்டில் சிக்கினார்

காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி துப்பாக்கிச்சூட்டில் சிக்கினார்

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் காங்கிரஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்துள்ளனர்.உடுப்பி மாவட்டம் படுபித்ரி அருகே உள்ள முதரங்கடி பகுதியை சேர்ந்தவர் டேவிட் டிசோசா. காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான இவர், ஒப்பந்ததாரராகவும் செயல்பட்டு வந்தார். முதரங்கடியில் அவருக்கு சொந்தமான அலுவலகம் உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் பிற்பகல் 3.45 மணியளவில் அலுவலகத்துக்கு வந்த டேவிட் டிசோசா, பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக புறப்பட்டார். அவர் காரின் அருகே சென்றபோது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில் டேவிட் டிசோசா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து படுபித்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். தகவல் அறிந்த உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது.இந்த நிலையில், டேவிட் டிசோசா கொலையில் தொடர்புடைய 3 பேர் படுபித்ரியில் இருந்து உத்தரகன்னடா மாவட்டத்தில் உள்ள பட்கல்லுக்கு பஸ்சில் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து பைந்தூர் அருகே ஒட்டினனே பகுதியில் போலீசார் அந்த பஸ்சை மறித்து சோதனை செய்தனர். போலீசார் தங்களை பிடிக்க வந்ததை அறிந்த 3 பேரும் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.அப்போது அவர்களில் ஒருவர் காபு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேஜஸ் வியை துப்பாக்கியால் மிரட்டியதுடன், அவரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். இதையடுத்து போலீசார் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவரது காலில் குண்டு பாய்ந்ததால் கீழே விழுந்தார். பின்னர் போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர்.துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அந்த நபரையும், தாக்குதலில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் தேஜஸ்வியையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இருவருக்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் உத்தரபிரதேச மாநிலம் பில்வாவை சேர்ந்த ராஜூ (42), உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த அஜய் ரஸ்தோகி (23), பீகாரை சேர்ந்த ஜியா உல்ஷேக் என்பது தெரியவந்தது. இவர்களில் ராஜூவை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.மூவரும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.