கவுண்டம்பாளையம் தொகுதியில் தீவிர டெங்கு தடுப்பு பணிகள்: அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

12 Sep 2026 www.thinathulir.com

கவுண்டம்பாளையம் தொகுதியில் தீவிர டெங்கு தடுப்பு பணிகள்: அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு

கவுண்டம்பாளையம் தொகுதியில் தீவிர டெங்கு தடுப்பு பணிகள்: அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 23-வது வார்டு சித்ரா பகுதி சவுபாக்கியா நகரில் டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் பணிகளும், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்பணிகளை அமைச்சர் அருண்ராஜ் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது கவுண்டம்பாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மற்றும் மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். சவுபாக்கியா நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு மருந்து தெளிப்பு, தூய்மைப் பணிகள் மற்றும் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் அருண்ராஜ் நேரில் கண்காணித்தார். மேலும், வீடுகளில் கொசுப் புழுக்கள் உருவாகும் வகையில் தண்ணீர் தேங்கி உள்ளதா என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் தண்ணீர் தேங்காத வகையில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற பொருட்கள், பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள் உள்ளிட்டவற்றில் மழைநீர் தேங்குவதைத் தவிர்த்து, சுற்றுப்புறத்தை தொடர்ந்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் அலட்சியம் செய்யாமல், உடனடியாக அருகிலுள்ள அரசு சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். டெங்கு பாதிப்பைத் தடுக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம். அனைவரும் இணைந்து செயல்படுவதன் மூலம் டெங்கு இல்லாத கோவையை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.