கவின் பெற்றோரிடம் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு: மேல்முறையீடு செய்வதாக உறுதி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
03 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 03 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கவின் பெற்றோரிடம் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு: மேல்முறையீடு செய்வதாக உறுதி

கவின் பெற்றோரிடம் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு: மேல்முறையீடு செய்வதாக உறுதி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் விவசாயி சந்திரசேகர். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களது மகன் கவின், என்ஜினீயராக பணியாற்றி வந்தார். மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்ததாக கூறப்படும் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நெல்லையில் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் இளம்பெண்ணின் சகோதரர் சுர்ஜித், அவரது பெற்றோரும் சப்-இன்ஸ்பெக்டர்களுமான சரவணன், கிருஷ்ணகுமாரி, மேலும் உறவினர் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தற்போது இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி, அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை மதுரை ஐகோர்ட்டு சமீபத்தில் ரத்து செய்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கவினின் பெற்றோர் ஆறுமுகமங்கலத்தில் நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏரல் தாசில்தார் ஸ்ரீனிவாசன் போராட்டத்தில் இருந்த கவினின் பெற்றோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர், தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாருடன் செல்போனில் பேசுவதற்காக பெற்றோரிடம் செல்போனை வழங்கினார். அவர்களிடம் பேசிய அமைச்சர், மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். மேலும், காத்திருப்பு போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக்கொண்டார். ஆனால், அரசு மேல்முறையீடு செய்யும் என்பதை எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும் என்று கவினின் பெற்றோர் தெரிவித்தனர். அதுவரை தங்களது காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கூறினர்.