கவர்னர் அர்லேகரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் விஜய்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
15 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 15 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கவர்னர் அர்லேகரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் விஜய்

கவர்னர் அர்லேகரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் விஜய்

தமிழகத்தின் முழுநேர கவர்னராகப் பொறுப்பேற்றுள்ள ஆர்.வி.அர்லேகரை, முதல்-அமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். தமிழக கவர்னராகப் பதவி வகித்து வந்த ஆர்.என்.ரவி, கடந்த மார்ச் 5-ந்தேதி மேற்கு வங்காள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழகத்துக்கு புதிய கவர்னர் நியமிக்கப்படாமல் இருந்த நிலையில், கேரள கவர்னராக இருந்த ஆர்.வி.அர்லேகர் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். இவரே முதல்-அமைச்சர் விஜய்க்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனால், கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தமிழகத்துக்குத் தனியாக முழுநேர கவர்னர் இல்லாத நிலை நீடித்தது. இதற்கிடையே, கடந்த ஆகஸ்டு மாதம் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி கிரண் ரெட்டி தமிழக கவர்னராக நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. அப்போது பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணத்தில் இருந்ததால், அவர் நாடு திரும்பியதும் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். அதன்படி, கேரள கவர்னராக இருந்த ஆர்.வி.அர்லேகர் தமிழகத்தின் முழுநேர கவர்னராக நியமிக்கப்பட்டார். பிரதமர் மோடி தமிழகத்துக்கு ஒருநாள் பயணமாக வந்து சென்ற சில நாட்களுக்குப் பிறகு இந்த நியமனம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஆர்.வி.அர்லேகருக்கு முதல்-அமைச்சர் விஜய் சமூக வலைத்தளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார். தொடர்ந்து, தமிழகத்தின் முழுநேர கவர்னராக அர்லேகர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில், கிண்டியில் உள்ள மக்கள் பவனுக்குச் சென்ற முதல்-அமைச்சர் விஜய், கவர்னர் அர்லேகரை நேரில் சந்தித்தார். அப்போது அவருக்குப் பூங்கொத்து வழங்கி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.