காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் கூடுதல் மனு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
10 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் கூடுதல் மனு

காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் கூடுதல் மனு

காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில் உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் பா. கருணாகரன் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், தமிழகத்துக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள 15.02 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு உடனடியாக திறந்துவிட உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 10 நாட்களுக்கு தினமும் 1.30 டி.எம்.சி. நீர் கிடைப்பதை உறுதி செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24-ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது. அத்துடன், கடந்த 24-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை வழங்கப்படாத நீரால் ஏற்பட்டுள்ள 0.940 டி.எம்.சி. பற்றாக்குறையை ஈடுசெய்யவும் கோரப்பட்டுள்ளது. அக்டோபர் 8-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தின் குறிப்புகளில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் குறிப்பிட்டுள்ளபடி, தொடர்ந்து நீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு கூடுதல் மனுவில் வலியுறுத்தியுள்ளது.