கவின் ஆணவக்கொலை வழக்கு: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Nov 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Nov 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கவின் ஆணவக்கொலை வழக்கு: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

கவின் ஆணவக்கொலை வழக்கு: தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ், காதல் விவகாரத்தைத் தொடர்ந்து கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். சாதியப் பின்னணியில் இந்தக் கொலை நிகழ்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இளம்பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்தக் கொலையில் பெண்ணின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது. இதன் அடிப்படையில் அவர்களும் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் குறிப்பிட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, அவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தக் குற்றவியல் வழக்கை தமிழக அரசு கையாண்ட விதம் குறித்து அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், வழக்கை முறையாகக் கையாளவில்லை என்றும் தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது.