கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர், கிளீனர் உள்பட 14 பேர் காயமடைந்தனர்.
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர், கிளீனர் உள்பட 14 பேர் காயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர், கிளீனர் உள்பட 14 பேர் காயமடைந்தனர்.

சென்னையில் இருந்து சுமார் 36 பயணிகளுடன் தனியார் சொகுசு பஸ் ஒன்று நேற்று நள்ளிரவு மதுரைக்கு புறப்பட்டது. இந்த பஸ்சை திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த பா.பாலமுருகன் (30) ஓட்டிச் சென்றார். இந்நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில் உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ் வந்தபோது, திடீரென சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் பாலமுருகன், கிளீனர் பைசல் (18) உள்ளிட்ட 14 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் மற்றும் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர் காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.