கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே திருமணமான சில நாட்களிலேயே புதுப்பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜிதா (25). பி.எஸ்.சி., பி.எட். பட்டதாரியான இவர், வாசுதேவனூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (27) என்பவருக்கும் கடந்த 7-ந்தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் சுஜிதா வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், உறவினர்கள் கவலையடைந்து பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது, அருகிலுள்ள விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில் சுஜிதா குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.