சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. இவர் குடும்பத்துடன் கொளத்தூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி அதிகாலை வி.எஸ்.பாபுவுக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னர், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ்.பாபு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளுடன் சுவாச ஆதரவும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வி.எஸ்.பாபுவை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், நுரையீரல் தொற்று காரணமாக வி.எஸ்.பாபு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறினார். மேலும், எம்.எல்.ஏ.வின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. இவர் குடும்பத்துடன் கொளத்தூரில் வசித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி அதிகாலை வி.எஸ்.பாபுவுக்கு திடீரென கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின்னர், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ்.பாபு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளுடன் சுவாச ஆதரவும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வி.எஸ்.பாபுவை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், நுரையீரல் தொற்று காரணமாக வி.எஸ்.பாபு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறினார். மேலும், எம்.எல்.ஏ.வின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை விரைவில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.