கல்லூரி நூலகங்களுக்கு 10 ஆயிரம் புத்தகங்கள் வழங்கிய மு.க.ஸ்டாலின்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Nov 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Nov 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கல்லூரி நூலகங்களுக்கு 10 ஆயிரம் புத்தகங்கள் வழங்கிய மு.க.ஸ்டாலின்

கல்லூரி நூலகங்களுக்கு 10 ஆயிரம் புத்தகங்கள் வழங்கிய மு.க.ஸ்டாலின்

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்னை நேரில் சந்தித்தவர்கள் பரிசாக வழங்கிய புத்தகங்களில் இருந்து 10 ஆயிரம் புத்தகங்களை இன்று (நவம்பர் 5) பல்வேறு கல்வி நிறுவனங்களின் நூலகங்களுக்கு வழங்கினார். இதன்படி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் தன்னாட்சிக் கல்லூரி நூலகத்திற்கு 5,000 புத்தகங்களும், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் செயல்படும் ரஹ்மானியா கல்விக் கூடம் வாட் பயிற்சி மையத்திற்கு 3,000 புத்தகங்களும் வழங்கப்பட்டன. அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி நூலகத்திற்கு 2,000 புத்தகங்கள் ஒதுக்கப்பட்டன. இவ்வாறு மொத்தம் 10 ஆயிரம் புத்தகங்களையும், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், சம்பந்தப்பட்ட நூலக நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தார். தன்னைச் சந்திக்க வருபவர்கள் வழங்கும் புத்தகங்களைத் தங்களது கல்லூரி மற்றும் உள்ளூர் நூலகங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை மு.க.ஸ்டாலின், தனக்குப் பரிசாகக் கிடைத்த புத்தகங்களில் இருந்து 7 லட்சத்து 10 ஆயிரம் புத்தகங்களை பல்வேறு கல்லூரிகள் மற்றும் மாவட்ட நூலகங்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.