கலிபோர்னியாவில் நவம்பர் 8-ம் தேதி தீபாவளி கொண்டாட்டத்துக்கு அங்கீகாரம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Aug 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Aug 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கலிபோர்னியாவில் நவம்பர் 8-ம் தேதி தீபாவளி கொண்டாட்டத்துக்கு அங்கீகாரம்

கலிபோர்னியாவில் நவம்பர் 8-ம் தேதி தீபாவளி கொண்டாட்டத்துக்கு அங்கீகாரம்

உலகம் முழுவதும் இந்து மக்களால் முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சட்டசபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வருகிற நவம்பர் 8-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த நாளை தீபாவளி தினமாக அங்கீகரிக்கும் தீர்மானம் கலிபோர்னியா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டசபை உறுப்பினர்களான தர்ஷனா படேல் மற்றும் ஆஷ் கல்ரா ஆகியோர் இந்த தீர்மானத்தை முன்வைத்தனர். அதில், தீபாவளி பழமையான பண்டிகைகளில் ஒன்றாக இருப்பதுடன், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சமூகத்தினரை ஒன்றிணைக்கும் முக்கிய நிகழ்வாகவும் விளங்குகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், தாராள மனப்பான்மை, ஒற்றுமை, மகிழ்ச்சி, நன்றியுணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்துவதோடு, சுய சிந்தனைக்கும் தீபாவளி வழிவகுக்கிறது என தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.2026-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தை அங்கீகரிப்பதாகவும், மகிழ்ச்சியான இந்த விழாவில் கலிபோர்னியா மக்கள் பங்கேற்க வேண்டும் என்றும் சட்டசபை அழைப்பு விடுத்துள்ளது.