கர்நாடகாவில் சோகம்: ஏரியில் மூழ்கி 6 பேர் பலி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Aug 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Aug 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கர்நாடகாவில் சோகம்: ஏரியில் மூழ்கி 6 பேர் பலி

கர்நாடகாவில் சோகம்: ஏரியில் மூழ்கி 6 பேர் பலி

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள பட்னல் ஏரியில் 6 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் சடலங்கள் மிதப்பதாக போலீசாருக்கு இன்று தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், ஏரியில் இருந்து 4 பெண்கள் மற்றும் 2 சிறுவர்களின் சடலங்களை மீட்டனர். பின்னர் அவை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.உயிரிழந்த 6 பேரும் யார், அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஏரியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்களா, தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது