கரூர் அருகே நேருக்கு நேர் மோதிய லாரிகள்: 2 டிரைவர்கள் பலி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Aug 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Aug 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கரூர் அருகே நேருக்கு நேர் மோதிய லாரிகள்: 2 டிரைவர்கள் பலி

கரூர் அருகே நேருக்கு நேர் மோதிய லாரிகள்: 2 டிரைவர்கள் பலி

திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியில் சென்றபோது, எதிரே எம்-சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த மற்றொரு லாரியுடன் அந்த லாரி நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் இரு லாரிகளின் டிரைவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று, உயிரிழந்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த விபத்து காரணமாக திருச்சி–கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.