கரூரில் முதல்-அமைச்சர் விஜய்: வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு...
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
10 Jul 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Jul 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கரூரில் முதல்-அமைச்சர் விஜய்: வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு...

கரூரில் முதல்-அமைச்சர் விஜய்: வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு...

கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்-அமைச்சர் விஜய் இன்று திருச்சி வழியாக கரூருக்கு வந்தார். அவரது வருகையையொட்டி, திருச்சி–கரூர் சாலையின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டனர். -அமைச்சரின் வாகனம் சென்ற வழியெங்கும் மக்கள் கைகளை அசைத்து வரவேற்பு தெரிவித்ததுடன், பல இடங்களில் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர். இளைஞர்கள், பெண்கள் மற்றும் குடும்பத்தினருடன் வந்த பொதுமக்களும் சாலையோரங்களில் திரண்டு அவரை வரவேற்றனர். கரூரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்காக மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டதுடன், பாதுகாப்பு பணியிலும் ஏராளமான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டனர். முதல்-அமைச்சர் விஜய், அரசு நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு பணி நியமன ஆணைகள் மற்றும் பிற நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.