கர்நாடகாவில் பிரிட்ஜ் வெடித்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

15 Sep 2026 www.thinathulir.com

கர்நாடகாவில் பிரிட்ஜ் வெடித்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

கர்நாடகாவில் பிரிட்ஜ் வெடித்து விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

கர்நாடகா மாநிலம் பெலகாவி நகரின் மையப்பகுதியில் உள்ள சவத் காலி பகுதியில் ஒரு வீட்டில் பிரிட்ஜ் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் தீப்பற்றி, சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. வீட்டுக்குள் இருந்தவர்களால் உடனடியாக வெளியேற முடியாத நிலை ஏற்பட்டதால், அவர்கள் தீயில் சிக்கிக்கொண்டனர். இந்தச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக ஏற்பட்ட அதிகப்படியான மின் அழுத்தத்தால் வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இருப்பினும், தீ விபத்துக்கான முழுமையான காரணத்தை உறுதி செய்ய தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.