கன்னியாகுமரியில் புதிய சுற்றுலா படகு அறிமுகம்... 150 இருக்கைகள் கொண்ட அதிநவீன படகு வெள்ளோட்டம் வெற்றி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
12 Nov 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 12 Nov 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கன்னியாகுமரியில் புதிய சுற்றுலா படகு அறிமுகம்... 150 இருக்கைகள் கொண்ட அதிநவீன படகு வெள்ளோட்டம் வெற்றி

கன்னியாகுமரியில் புதிய சுற்றுலா படகு அறிமுகம்... 150 இருக்கைகள் கொண்ட அதிநவீன படகு வெள்ளோட்டம் வெற்றி

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், 150 பேர் பயணிக்கக்கூடிய புதிய அதிநவீன படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படகின் சோதனை ஓட்டம் இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. கன்னியாகுமரி கடல் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் இவ்விரு நினைவுச் சின்னங்களையும் இணைக்கும் கண்ணாடி பாலம் ஆகியவற்றைக் காண தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கண்ணாடி பாலம் பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால், அதற்கேற்ப படகு சேவைகள் அதிகரிக்கப்படாததால், படகுத் துறையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. இதனால் கூடுதல் படகுகளை இயக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திமுக ஆட்சியில் புதிய அதிநவீன சுற்றுலாப் படகு வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோவாவில் 150 இருக்கைகள் கொண்ட நவீன வசதிகளுடன் படகு தயாரிக்கப்பட்டு கன்னியாகுமரிக்குக் கொண்டு வரப்பட்டது. இந்தப் படகுக்கு 'பெருந்தலைவர் காமராஜர்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை செல்லும் கடல் வழித்தடத்தில் 'பெருந்தலைவர் காமராஜர்' படகின் வெள்ளோட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, விரைவில் இந்தப் படகு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.புதிய படகு சேவையால் சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.