கனமழை எதிரொலி: தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
26 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கனமழை எதிரொலி: தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை

கனமழை எதிரொலி: தமிழகத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் எவை

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்குப் பெய்யாத நிலையில், வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலோரப் பகுதிகள் மட்டுமின்றி உள் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. திண்டுக்கல்: மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று பல பகுதிகளில் கனமழை பதிவான நிலையில், நிலக்கோட்டையில் அதிகபட்சமாக 60.20 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் துர்கா மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம்: மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதையடுத்து, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் அறிவித்துள்ளார். கோயம்புத்தூர்: கனமழையால் சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி: தொடர்ந்து பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா ஆகிய நான்கு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு வெளியிட்டுள்ளார். அதேநேரத்தில், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேனி:பெரியகுளம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி:தியாகதுருகம் வட்டத்தில் நான்கு பள்ளிகளுக்கும், சின்னசேலம், பொரசக்குறிச்சி மற்றும் விருகாவூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம்:மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால்:கனமழையை முன்னிட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாவட்டத்துக்கு மாவட்டம் விடுமுறை அறிவிப்புகள் மாறுபடுவதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் பகுதிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்ற வேண்டும்.