கந்தசஷ்டி விழா: மருதமலை மலைப்பாதையில் 2 நாட்களுக்கு வாகனங்கள் செல்ல தடை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கந்தசஷ்டி விழா: மருதமலை மலைப்பாதையில் 2 நாட்களுக்கு வாகனங்கள் செல்ல தடை

கந்தசஷ்டி விழா: மருதமலை மலைப்பாதையில் 2 நாட்களுக்கு வாகனங்கள் செல்ல தடை

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழா, வரும் 10-ம் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், வருகிற 15-ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம் அதிகளவில் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் செல்ல படிக்கட்டுப் பாதை அல்லது கோவில் பேருந்துகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில், வரும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் மருதமலை மலைப்பாதையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காக கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுதவிர, பக்தர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.