கட்சியினர் மீதான நடவடிக்கைகளில் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் - தமிழிசை வலியுறுத்தல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
10 Nov 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Nov 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கட்சியினர் மீதான நடவடிக்கைகளில் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் - தமிழிசை வலியுறுத்தல்

கட்சியினர் மீதான நடவடிக்கைகளில் விஜய் தனி கவனம் செலுத்த வேண்டும் - தமிழிசை வலியுறுத்தல்

த.வெ.க. கட்சியினரின் செயல்பாடுகள் மற்றும் அவர்கள் மீதான புகார்கள் தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பத்மஜாவுக்கு த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் விரும்பத்தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பெண்கள் எந்தப் பொறுப்பில் அல்லது சூழலில் இருந்தாலும், அவர்களை சிலர் தவறான கண்ணோட்டத்துடன் அணுகுவது வேதனையளிப்பதாகவும், இத்தகைய மனப்பான்மை கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் புகாரில் உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர் யாராக இருந்தாலும் அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், கட்சியின் சார்பிலும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். கட்சியினரின் இத்தகைய செயல்பாடுகள் மீண்டும் நிகழாமல் தடுக்க முதல்-அமைச்சர் விஜய் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றும், விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழிசை தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.