‘கடவுள் தந்த பரிசு’: இளையராஜா இசையில் மீண்டும் ராமராஜன்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

07 Sep 2026 www.thinathulir.com

‘கடவுள் தந்த பரிசு’: இளையராஜா இசையில் மீண்டும் ராமராஜன்

‘கடவுள் தந்த பரிசு’: இளையராஜா இசையில் மீண்டும் ராமராஜன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன், மீண்டும் புதிய படத்தில் நடிக்கிறார். ‘கடவுள் தந்த பரிசு’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இதன் மூலம் ராமராஜன் - இளையராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.ராமராஜன் நடிப்பில் வெளியான பல வெற்றிப் படங்களின் பாடல்கள், குறிப்பாக இளையராஜா இசையமைத்த படங்களின் பாடல்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இதன் மூலம் இந்த கூட்டணிக்கு தனி ரசிகர் பட்டாளமும் உருவானது. ராமராஜன் கடைசியாக 2024-ம் ஆண்டு வெளியான ‘சாமானியன்’ படத்தில் நடித்திருந்தார்.இந்நிலையில், அவர் நடிக்கும் புதிய படத்தை காசிமாயன் இயக்குநராக அறிமுகமாகி இயக்குகிறார். படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையையும் அவரே எழுதியுள்ளார். நகைச்சுவைப் பகுதிகளை ராஜகோபால் எழுதுகிறார். வசனங்களை ராஜகோபால் மற்றும் எம். அடைக்கலம் இணைந்து எழுதியுள்ளனர்.‘கடவுள் தந்த பரிசு’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ராமராஜன் - இளையராஜா இணையும் 25-வது படமாக இது உருவாகிறது. மேலும், செந்தில் மற்றும் கோவை சரளா ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராமராஜனுடன் இணைந்து இப்படத்தில் நகைச்சுவை காட்சிகளில் நடிக்கின்றனர். பாடல் பதிவு பணிகளுடன் இப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.