கடந்த அக்டோபரில் பத்திரப்பதிவுத் துறை மூலம் ரூ.1,950 கோடி வருவாய்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Nov 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Nov 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கடந்த அக்டோபரில் பத்திரப்பதிவுத் துறை மூலம் ரூ.1,950 கோடி வருவாய்

கடந்த அக்டோபரில் பத்திரப்பதிவுத் துறை மூலம் ரூ.1,950 கோடி வருவாய்

தமிழகப் பத்திரப்பதிவுத் துறை கடந்த 2026 அக்டோபர் மாதத்தில் ரூ.1,950 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கிடைத்த வருவாயைவிட ரூ.147 கோடி அதிகமாகும். பதிவுத்துறை அலுவலர்களின் செயல்பாடுகள் மற்றும் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை பாரிமுனையில் உள்ள வடக்கு மாவட்டப் பதிவாளர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தலைமை தாங்கி பேசினார். கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட வருகையில்லா ஆவணப் பதிவுத் திட்டத்தின் கீழ், நவம்பர் 3-ம் தேதி வரை மொத்தம் 2,46,260 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மனைப்பிரிவுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் முதல் விற்பனைப் பத்திரங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உரிமையை ஒப்படைக்கும் ஆவணங்கள், ரசீது ஆவணங்கள் ஆகியவை அடங்கும். மேலும், பதிவு செய்யப்படும் ஆவணங்களை எவ்வித காலதாமதமும் இன்றி அன்றைய தினமே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என மாவட்டப் பதிவாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். வருவாய் இழப்பைத் தவிர்ப்பதுடன், மாநிலத்தின் நிதி இலக்குகளை எட்டுவதற்கும் அதிகாரிகள் அனைவரும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்கு முன்னதாக, நீதிமன்ற வழக்குகளைக் கண்காணிப்பதற்கும், பதிவுத்துறையின் சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய செயலியின் பயன்பாட்டை அமைச்சர் தொடங்கி வைத்தார்.