கட்சியா இல்லை நார்கோஸ் கூடாரமா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
19 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 19 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

கட்சியா இல்லை நார்கோஸ் கூடாரமா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

கட்சியா இல்லை நார்கோஸ் கூடாரமா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி

நாகையில் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், த.வெ.க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து செய்தி வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு அக்கட்சியின் மற்றொரு நிர்வாகி கொலை மிரட்டல் விடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: நாகையில் 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை வைத்திருந்ததாக த.வெ.க நிர்வாகி பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்த செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களுக்கு, த.வெ.க நாகை நகரச் செயலாளர் பால்ராஜ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பூபாலன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், கட்சிப் பொறுப்பில் இருக்கும் மற்றொரு நிர்வாகி, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதானவருக்கு ஆதரவாகப் பேசுவதுடன், செய்தியாளர்களையும் மிரட்டுவது ஏன்? த.வெ.க ஒரு அரசியல் கட்சியா அல்லது போதைப்பொருள் கடத்தல் கும்பலின் புகலிடமா என்று கேட்கும் அளவுக்கு, அக்கட்சியுடன் தொடர்புடைய போதைப்பொருள் வலையமைப்பின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. தற்போதைய முதலமைச்சரின் ஆட்சியில், அவரது கட்சியைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்களும், சர்வதேச கடத்தல் குழுக்களும் தடையின்றி செயல்படுவதாகத் தெரிகிறது. வெறும் விளம்பரங்களிலும், காட்சிப் பதிவுகளிலும் கவனம் செலுத்தாமல், உண்மையான நிலவரத்தை உணர்ந்து போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க வேண்டும். அதில் ஈடுபடும் த.வெ.க நிர்வாகிகள் மீதும் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.