குஜராத்தில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து : 5 பேர் படுகாயம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

குஜராத்தில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து : 5 பேர் படுகாயம்

குஜராத்தில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து : 5 பேர் படுகாயம்

குஜராத் மாநிலம் வதோதராவில் நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததுடன், அதில் பொருத்தப்பட்டிருந்த சிஎன்ஜி சிலிண்டரும் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். வதோதராவின் நவயார்டு பகுதியில் அமைந்துள்ள ராம்வாடி குடியிருப்பில் கடந்த 4-ம் தேதி ஹோண்டா சிட்டி கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. நள்ளிரவு சுமார் 2 மணியளவில் அந்த காரில் திடீரென தீப்பற்றியது. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் காரில் இருந்த சிஎன்ஜி சிலிண்டர் பெரும் சத்தத்துடன் வெடித்தது. சிலிண்டர் வெடித்ததன் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்ததால், காரின் இரும்புப் பாகங்களும் தகடுகளும் சுமார் 200 மீட்டர் தொலைவு வரை தூக்கி வீசப்பட்டன. நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர சத்தத்தைக் கேட்டு வீடுகளை விட்டு வெளியே வந்த அப்பகுதி மக்கள் மீது காரின் சிதறிய பாகங்கள் விழுந்தன. இதில் தீபிகாபென், உஷாபென், நாகின்பாய், சவிதாபென், வினாபென் ஆகிய 5 பேர் இரும்புத் துண்டுகள் தாக்கியதில் பலத்த காயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட அவர்கள், வதோதராவில் உள்ள சயாகாஞ் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் ஹோண்டா சிட்டி கார் முற்றிலும் எரிந்து உருக்குலைந்தது. மேலும், சிலிண்டர் வெடித்ததில் ஏற்பட்ட தீ அருகிலிருந்த சிறிய கடைக்கும் பரவியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த சில மிதிவண்டிகளும் தீயில் சேதமடைந்தன. முதற்கட்ட விசாரணையில், விபத்துக்குள்ளான காரில் சம்பவம் நிகழ்வதற்கு 15 நாட்களுக்கு முன்புதான் புதிய சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிலிண்டர் வெடித்ததற்கான காரணம் குறித்து பதேகஞ்ச் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், கார் தீப்பற்றி எரிந்து பின்னர் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்துச் சிதறும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.