ஓணம் பண்டிகை: போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்த கேரள அரசு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Aug 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Aug 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஓணம் பண்டிகை: போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்த கேரள அரசு

ஓணம் பண்டிகை: போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்த கேரள அரசு

கேரளாவின் முக்கிய அறுவடை திருவிழாவான ஓணம் பண்டிகை 10 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஓணம் விழா கடந்த 16-ம் தேதி தொடங்கிய நிலையில், முக்கிய நாளான திருவோணம் வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.இதையொட்டி, கேரள போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாநில அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, நிரந்தர ஊழியர்களுக்கு அவர்களின் ஊதியத்தில் இருந்து தலா ரூ.10 ஆயிரம் முன்பணமாக வழங்கப்படும். மேலும், ஒவ்வொரு நிரந்தர ஊழியருக்கும் ரூ.3 ஆயிரம் போனஸ் வழங்கப்படும்.தற்காலிக பணியாளர்களுக்கு தலா ரூ.1,000 போனஸ் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.மேலும், போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 42,549 ஓய்வூதியதாரர்களுக்கு தலா ரூ.1,250 போனஸ் வழங்கப்பட உள்ளது.இந்த போனஸ் வழங்குவதற்காக ரூ.33.92 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜான் தெரிவித்துள்ளார்.