ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 11 பவுன் நகை திருட்டு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 11 பவுன் நகை திருட்டு

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 11 பவுன் நகை திருட்டு

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் கிராமம் அருணாச்சலம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்புமணி. இவரது மனைவி பத்மாவதி (70). இவர்களின் மகள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள பனையூர் கிராமத்தில் வசித்து வருகிறார். கடந்த 13-ந் தேதி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே திமிரியில் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பத்மாவதி பங்கேற்றார். திருமணம் முடிந்த பின்னர், தான் அணிந்திருந்த 11 பவுன் நகைகளை கழற்றி ஒரு பையில் வைத்துக் கொண்டு, பஸ்சில் ஆரணிக்கு புறப்பட்டார். பின்னர் மகளை சந்திப்பதற்காக பனையூர் கிராமத்திற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். திமிரியிலிருந்து ஆரணிக்கு பஸ்சில் ஏறியபோது கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. பஸ் சிறிது தூரம் சென்றதும் பத்மாவதி தனது பையை திறந்து பார்த்துள்ளார். அப்போது அதில் வைத்திருந்த 11 பவுன் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பாக பத்மாவதி திமிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், ஓடும் பஸ்சில் திருட்டு நடந்ததால் அது தங்களது காவல் எல்லைக்குள் வராது எனக் கூறி திமிரி போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதேபோல், திருட்டு நடந்த இடம் திமிரி பகுதி என ஆரணி தாலுகா போலீசாரும் தெரிவித்ததால், எந்த போலீஸ் நிலையம் வழக்குப்பதிவு செய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓடும் பஸ்சில் 11 பவுன் நகைகளை திருடிச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.