ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா ’ஏ’-க்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா ’ஏ’-க்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா ’ஏ’-க்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

இந்தியா 'ஏ' அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா 'ஏ' அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் இந்திய அணி முதலில் பந்துவீசுகிறது. இந்தியா 'ஏ' மற்றும் ஆஸ்திரேலியா 'ஏ' அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில், முதல் போட்டியில் இந்தியா 'ஏ' அணி 162 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி போட்டி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் ஆட்டம் புதுச்சேரியில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி பகல்-இரவு போட்டியாக நடைபெறுகிறது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா 'ஏ' அணியில் இடம்பெற்றிருந்த ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உடற்தகுதி பெறாததால், அவருக்குப் பதிலாக சூர்யான்ஷ் ஷெட்கே அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 20 ஓவர் தொடருக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள நமன் திருக்குப் பதிலாக அனுகுல் ராய் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆஸ்திரேலியா 'ஏ' அணியில் இருந்த ஜேக் எட்வர்ட்ஸ், தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் தேர்வு செய்யப்பட்டதால் விலகியுள்ளார். ஆரோன் ஹார்டி காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவர்களுக்குப் பதிலாக ரிலே மெரிடித் மற்றும் வில் சுதர்லேண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், முதல் ஒருநாள் போட்டிக்கான டாஸ் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா 'ஏ' அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இதன்படி இந்தியா 'ஏ' அணி முதலில் பந்துவீசுகிறது